நினைத்தேன் எழுதுகிறேன்
 
  தேர்தல் கருத்துக் கணிப்புகள்

அரசியல்வாதிகளும், இலவச அறிவிப்புகளும், நடிகர் - நடிகையர் பட்டாளங்களும் போதாதென்று தமிழக தேர்தல் களத்தை கருத்துக் கணிப்புகள் வேறு கலங்கடித்து வருகின்றன. நாளொரு மேனியும் பொழுதொரு கணிப்புமாக வெளியாகிய வண்ணம் உள்ளன. அனைவருமே தங்களுடையதே மக்கள் கருத்தை பிரதிபலிப்பதாக கூறுகின்றனர். முடிவுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக உள்ளதுதான் இதில் வேடிக்கை.

குமுதமும், துக்ளக்கும் அதிமுகவுக்கே அறுதி பெரும்பான்மை என்கின்றன. குங்குமம் திமுகவுக்குதான் வெற்றி என்கிறது. இவ்விரண்டும் கட்சி சார்புடையன என்பதால் இதனை தவிர்த்து பார்த்தால் CNN-IBN மற்றும் The Hindu நாளிதழ் நடத்திய கணிப்பு இரு கூட்டணிக்குமே கிட்டத்தட்ட சமமாக ஆதரவு உள்ளதாக குறிப்பிடுகிறது.

கணிப்புகள் தங்களுக்கு சாதகமாக இருந்தால் மேற்கோள் காட்டிப் பேசுவதும், பாதகமாக இருந்தால் பணம் வாங்கி விட்டார்கள் என்று ஏசுவதுமாக அரசியல்வாதிகள் அவற்றை எதிர்கொள்கின்றனர். அவர்கள் பற்றி நமக்கு அக்கறையில்லை. ஆனால் இதுபோன்ற கணிப்புகள் பொது மக்கள் மனதில் உளவியல்ரீதியாக எம்மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன என்பது சிந்தனைக்குரியது.

-- இதுபற்றி இவ்வார ஜூவியில் "மாய விளையாட்டு" என்னும் தலைப்பில் ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது. அதில் தொடர்ந்து வெளியாகும் பல சொதப்பலான கட்டுரைகளுக்கிடையே இது கொஞ்சம் உருப்படியானது --

கருத்துக் கணிப்புகள் பற்றி பலரும் பல கருத்துகளைக் கொண்டுள்ளனர். 'இதெல்லாம் மக்கள் மனதில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தி விடாது' என்று ஒரு தரப்பினரும், 'ஜெயிக்கிற கட்சிக்கே நம்ம ஓட்டு' என்னும் குறைந்தபட்ச ஆசையுடைய நிறை குறைகளை சீர்தூக்கி பார்க்கும் இயல்பில்லாத மக்களிடம் பெரும் உளவியல்ரீதியான தாக்கங்களை ஏற்படுத்தும் என்று இன்னொரு தரப்பினரும் கூறுகிறார்கள். என்னைப் பொருத்தவரை இரண்டாவது கருத்தையே ஆதரிக்கின்றேன். இக்கட்சிதான் வெற்றி பெறப் போகிறது என்பதாக word of mouth பரப்பப்படும் கருத்து "சாய்ந்தா சாயிறப் பக்கமே சாயும் செம்மறி ஆடுகள்" மனநிலை கொண்ட மக்களிடம் பெரும்பாலும் எடுபடுகிறது. அதற்கு இம்மாதிரியான கருத்துக் கணிப்புகள் காரணமாக அமைகின்றன.

இதை உணர்ந்ததினால்தான் முன்பு அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் pre-polls, exit polls இரண்டுக்கும் தடை விதிக்கக் கோரின. அதன்படியே தடையும் விதிக்கப்பட்டது. ஆனால் அதற்கு அரசியல் சட்ட பாதுகாப்பு இல்லாததினால் உச்ச நீதி மன்றத்தினால் தடை நீக்கம் செய்யப்பட்டு விட்டது.

வாக்காளன் தன்னுடைய வாக்கை யாருக்கு அளிப்பது என்பதை முடிவு செய்வதில் உளவியல் குறுக்கீடு செய்யும் இதுபோன்ற அவசியமற்ற கருத்துக் கணிப்புகள் தவிர்க்கப்பட வேண்டியவையும், தடை செய்யப்பட வேண்டியவையும் ஆகும். அதற்கேற்ற சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
 
உங்கள் கருத்து:
பாவம்... நம்ம ஆளு தோற்கிறாரே என்னும் வருத்தத்தில், இறங்குமுகமாக உள்ளவருக்கு ஆதரவாக வாக்களிப்பவர்களும் திரளாக (தட்டிக் கழிக்காமல்) வரலாமே? (கருத்துக் கணிப்புகள் எல்லாம் டைம் பாஸ் என்பதுதான் மக்களின் அபிப்பிராயமாக இருக்கும்.)
 
கருத்துக் கணிப்புகள் ஏற்படுத்தும் உளவியல்ரீதியான பாதிப்புகளைப் பற்றியே நமது கவலை.

1. தான் ஆதரிக்கும் கட்சி தோற்கப் போவதாக கணிப்பின் முடிவுகள் இருந்தால் 'எப்படியும் தோற்கத்தானே போகிறது.. நம் ஒருவனின் ஓட்டில் என்ன மாற்றம் வந்துவிடப் போகிறது' -என ஜனநாயகக் கடமையிலிருந்து தவற வைக்கக் கூடும்.

2. வெற்றி வாய்ப்புள்ளதாக கருதப்படும் கட்சிகளுக்கு செயற்கையான வாக்கு சதவிகித அதிகரிப்பை உண்டாக்கக் கூடும்.

3. கட்சி சார்புடைய பத்திரிகைகள் போலியான கணிப்புகளை வெளியிட்டு வாக்களனை குழப்பி, குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க நினைக்கின்றன.

கட்சிகளின் செயல்பாடுகளை ஒப்பு நோக்கி வாக்களிக்க வேண்டிய உண்மையான ஜனநாயகத்தில் இது போன்ற குழப்பங்கள் தவிர்க்கப்பட வேண்டியன.

நீங்கள் குறிப்பிட்டுள்ளதுபோல் தான் ஆதரிக்கும் கட்சி இறங்குமுகமாக இருந்தால் அதற்கு தட்டிக் கழிக்காமல் வாக்களிக்கவும் ஒருவனை கணிப்புகள் தூண்டக் கூடும். தேர்தல் பணிகளில் சுணக்கமாக உள்ள கட்சிகளுக்கு எச்சரிக்கை மணியாகவும் உதவும். எனினும் சாதகங்களை விட பாதகங்களே அதிகமாக உள்ளதே இதில் பிரச்சினை.

மேற்குறிப்பிட்ட ஜூவி கட்டுரையில் இவ்விரண்டு விளைவுகளையும் bandwagon effect, underdog effect என்று வகைப்படுத்துகிறார்கள்.
 
pls visit and give your feedback.

http://peacetrain1.blogspot.com/
 
Post a Comment

<< முகப்பு

ராஜா,
நாமக்கல்.

மின்னஞ்சல
பழைய வீடு
 

முந்தைய பதிவுகள்:
10/02/2005 - 10/09/2005 10/23/2005 - 10/30/2005 12/25/2005 - 01/01/2006 04/02/2006 - 04/09/2006 04/09/2006 - 04/16/2006

செய்தி ஓடை - RSS(atom.xml)

Listed in tamizmaNam.com, where bloggers and  


readers meet ::  தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு,  


திரட்டப்படுகிறது




Powered by Blogger