நினைத்தேன் எழுதுகிறேன்
 
  வாழ்த்துக்கள் பாலா!

அடடே! நம்ம
பாலமுருகன்
க்ரோர்பதி நிகழ்ச்சியில் 50 லட்சம் ஜெயித்திருக்கிறார் போலிருக்கே! விகடனில் இப்போதுதான் படித்தேன். வாழ்த்துக்கள் பாலா சார்!

வலைப்பதிவுகளில் 'கலெக்டர் பாலா' என்று அறியப்படும் பாலமுருகனை கடந்த கோவை வலைப்பதிவர் சந்திப்பில் காசி வீட்டில் சந்தித்தேன். நடுநிசி வரை நீண்ட விவாதங்களும், கருத்து பரிமாற்றங்களும் இனிமையான அனுபவம்.

தொடர்ச்சியான நேர நெருக்கடி காரணமாக சிலகாலமாக வலைப்பதிவுகிலிருந்து முற்றிலுமாக சந்நியாசம் பெற்றிருந்தவன் புத்தாண்டு தொடக்கம் மீண்டும் எழுத எண்ணியிருந்தேன்.அதற்கு இடையில் மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ளும் விதமாக இச்சிறியப் பதிவு.

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
 
உங்கள் கருத்து:
வாங்க ராஜா..

பாத்து நாளாச்சே. " பேசலாம் " மணி எல்லாருக்கும் மணி அடிச்சிட்டார் போல :-)
 
ஆகா அட்டகாசமான செய்தி.

நம் அனைவரையும் பெருமை அடையச் செய்த பாலாவுக்கு வாழ்த்துகள்.

அன்புடன்
பரஞ்சோதி
 
I could not see the article in vikatan.com about Bala. where is it..? which issue..?
 
ராஜா வருக. என்ன திடீர்னு ஆள் காணாமல் போய்ட்டீங்க.
 
ராஜா நான் இதைப்பற்றி எழுதியுள்ள பதிவு இங்கே..

http://muthuvintamil.blogspot.com/2005/12/blog-post_19.html

நான் திருச்செங்கோடு தான்...நீங்க நாமக்கல்லில் எங்கே?
 
வரவேற்புக்கு நன்றி சுந்தர், கார்த்திக்.

மூக்கன்: //"பேசலாம்" மணி எல்லாருக்கும் மணி அடிச்சிட்டார் போல//
இதென்ன சுந்தர் புரியலையே?!

இந்த வார புத்தகத்தில் இது 'நியூஸ் ஸ்டேஷன்' என்ற பகுதியில் வெளியாகியுள்ளது. நான் விகடன் வலைமனை சந்தாதாரர் இல்லை என்பதால் அதன் சுட்டியை கொடுக்க முடியவில்லை. மேலும் புத்தகத்தின் அனைத்து பகுதிகளும் இணையமேற்றப்படுவதில்லை என்று நினைக்கிறேன். வேண்டுமானால் அந்த குறிப்பிட்ட பகுதியை ஸ்கேன் செய்து அனுப்புகிறேன்.

கார்த்திக்ரமாஸ்: (தற்காலிகமாக)வேலை வெளியூரில் என்றாகி, தினமும் போக வரவே நேரம் சரியாக இருந்தது. என் அனுபவத்தில் வலைப்பதிவுகளில் தீவிரமாக இயங்க தினமும் குறைந்த பட்சம் இரண்டு மணி நேரமாவது தேவைப்படுகிறது. அதற்கான வாய்ப்பு குறைந்துவிடும்போது இடைவெளி அதிகமாகி விடுகிறது.

முத்து: நாமக்கல் டவுனில்தான் வாசம். முடிந்தால் தனிமடலில் தொடர்பு கொள்ளுங்கள்; விரிவாக பேச ஏதுவாக இருக்கும்.
 
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
 
Hi Anna,

Visit my blog, http://anandpalanisamy.blogspot.com, for my photos.

Anbudan,
Anand
 
ராஜா,
நாமக்கல்லிலா இருக்கிறீர்கள்? என்கே?
எங்கள் வீடு நாமக்கல்லில்தான் இருக்கிறது. தங்கள் வீடு எங்கே?
தனி மடல் அனுப்பவும். என்னால் உங்கள் மின்னஞ்சல் முகவரியை அறிய முடியவில்லை.


(இதன் நகல்:
http://commentsofshibi.blogspot.com/2006/02/blog-post.html)
 
Post a Comment

<< முகப்பு

ராஜா,
நாமக்கல்.

மின்னஞ்சல
பழைய வீடு
 

முந்தைய பதிவுகள்:
10/02/2005 - 10/09/2005 10/23/2005 - 10/30/2005 12/25/2005 - 01/01/2006 04/02/2006 - 04/09/2006 04/09/2006 - 04/16/2006

செய்தி ஓடை - RSS(atom.xml)

Listed in tamizmaNam.com, where bloggers and  


readers meet ::  தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு,  


திரட்டப்படுகிறது




Powered by Blogger