நினைத்தேன் எழுதுகிறேன்
 
  படித்தது: இரவே வரவேண்டாம்

இரவே வரவேண்டாம்

கண்ணென்றும் மணியென்றும்
கற்கண்டுச் சுவையென்றும்
பொன்னென்றும் பூவென்றும்
பால்நிலவின் அழகென்றும்
என்னையள்ளி முத்தமிடும்
எனதருமைப் பெற்றோர்கள்
இன்னும்ஏன் தூங்கவில்லை
புரியாத புதிராகப்
பகலிலொரு புன்முறுவல்
இரவுகளில் ஏச்சுகள்
ஏனென்று புரியவில்லை
இரவுகளே... எனக்காக
இனிமேலே வரவேண்டாம்...

-ஏர்வாடி எஸ். ராதாகிருஷ்ணன் | கண்ணதாசன் இதழ்

எளிமையான விஷயம்; இலகுவான மொழி --ஒரு அகத்துறை செய்தியை புரியாத குழந்தை ஒன்றின்மூலம் புலப்படுத்தியிருக்கும் கவிஞரின் குறும்பு ரசிக்க வைக்கிறது.

00 00

குழந்தைகளின் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு மறக்க முடியாத இன்னொரு கவிதை.
 
உங்கள் கருத்து:
Can you please increase the font size? its hard to read,
 
Post a Comment

<< முகப்பு

ராஜா,
நாமக்கல்.

மின்னஞ்சல
பழைய வீடு
 

முந்தைய பதிவுகள்:
10/02/2005 - 10/09/2005 10/23/2005 - 10/30/2005 12/25/2005 - 01/01/2006 04/02/2006 - 04/09/2006 04/09/2006 - 04/16/2006

செய்தி ஓடை - RSS(atom.xml)

Listed in tamizmaNam.com, where bloggers and  


readers meet ::  தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு,  


திரட்டப்படுகிறது




Powered by Blogger